தமிழகத்தில் நேற்று 1,647 பேருக்கு கொவிட்!

Wednesday, 22 September 2021 - 9:05

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+1%2C647+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%21
தமிழகத்தில் நேற்று 1,647 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கமைய, 26 இலட்சத்து 48 ஆயிரத்து 688 பேருக்கு தமிழகத்தில் இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கொவிட்-19 காரணமாக 19 பேர் நேற்று உயிரிழந்தனர்.

இதன்படி, தமிழகத்தில் இதுவரை 35,379 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர்.

1,619 பேர் நேற்று குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 25 இலட்சத்து 96 ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது.

16, 993 பேர் சிகிச்சைப்பெறுகின்றனர்.