ஓகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் சிறிதளவு வீழ்ச்சி

Wednesday, 22 September 2021 - 10:17

%E0%AE%93%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
கடந்த ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் பணவீக்கம் ஓகஸ்ட் மாதம் சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், ஜுலை மாதம் 6.8 சதவீதத்திலிருந்து ஓகஸ்ட் மாதம் 6.7 சதவீதத்திற்கு சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது.

உணவுப் பணவீக்கம், கடந்த ஜுலை மாதம் 11 சதவீதத்திலிருந்து ஓகஸ்ட் மாதம் 11.1 சதவீதத்திற்கு சிறிதளவில் அதிகரித்ததுடன், உணவல்லாப் பணவீக்கம், 3.2 சதவீதத்திலிருந்து, 3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்களின் காரணமாக 2021 ஓகத்தில் 0.36 சதவீதத்தினைப் பதிவுசெய்தது.

மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள், முறையே 0.25 சதவீதத்தினையும் 0.11 சதவீதத்தினையும் பதிவுசெய்தன.

அதற்கமைய, உணவு வகையினுள் சீனி, உருளைக்கிழங்கு மற்றும் உடன் மீன் என்பவற்றின் விலைகள் அதிகரித்த அதேவேளை அரிசி, தேய்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் என்பவற்றின் விலைகள் வீழ்ச்சிகளைப் பதிவுசெய்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.