உள்நாட்டு பால்மாவின் விலையையும் அதிகரிக்குமாறு கோரிக்கை

Wednesday, 22 September 2021 - 13:08

%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, உள்நாட்டு பால்மாவின் விலையையும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேநீர் தயாரிப்பதற்காக பால்மாவை பயன்படுத்துவதை விட பசும்பாலை பயன்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு இலாபகரமானது என மில்கோ சங்கத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், பசும்பாலை உபயோகப்படுத்துவது, தற்போது காணப்படும் பால்மா பற்றாக்குறைக்கு தீர்வாக அமையும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சந்தையில் பால்மா பற்றாக்குறை தொடர்ந்து காணப்படுவதுடன், இந்நிலையில் பால்மாவின் விலையை அதிகரிப்பதால் தாம் பாரிய அசௌகரியத்திற்கு முகங்கொடுப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.