'வலிமை' திரைப்படம் வெளியிடப்படும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

Wednesday, 22 September 2021 - 13:45

+%27%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%27+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் 'வேற மாறி' பாடல் என்பன வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில், 'வலிமை' படம் வெளியிடப்படும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 'வலிமை' திரைப்படம் 2022 ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா வில்லனாக நடிக்கிறார். இவர் நடித்த தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் 'வலிமை' பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.