தைப்பொங்கல் பந்தயத்தில் வலிமை – பீஸ்ட்?

Wednesday, 22 September 2021 - 14:32

%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E2%80%93+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%3F
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படமும் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பின்னணி பணிகளை வேகமாக முடித்து, பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம், விஜய் - அஜித் படங்கள் மீண்டும் நேரடியாக மோதும் சூழல் உருவாகி உள்ளது.

இதற்கு, முன்னர் இறுதியாக அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.