மகிழுந்து நீர் நிலையில் மூழ்கியதில் நடிகை ஈஸ்வரி - காதலன் பலி!

Wednesday, 22 September 2021 - 16:10

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே தனது காதலனுடன் பயணித்த வாகனம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே.

இவர் கடந்த 15ஆம் திகதி தனது காதலன் சுப்பம் டெஜ் உடன் கோவாவுக்கு மகிழுந்தில் சுற்றுலா சென்றிருந்தார்.

அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, நேற்று முன்தினம் இருவரும் மும்பை திரும்பியுள்ளனர்.

கோவாவின் அர்போரா கிராமத்திற்கு அருகில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து, அருகில் உள்ள நீர் நிலையில் மூழ்கியுள்ளது.

மகிழுந்தில் இருந்து வெளியே வரமுடியாததால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஈஸ்வரி தேஷ்பாண்டேவுக்கும் அவரது காதலனுக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.