டெல்லி கெப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகளால் வெற்றி

Wednesday, 22 September 2021 - 23:08

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+8+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
ஐ.பி.எல் தொடரின் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில்
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக அப்துல் சமாத் 28 ஓட்டங்களையும், ரஷிட் கான் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அன்ரிச் நோர்ட்ஜே 12 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய,135 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய  டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக ஸ்ரேயாஷ் ஐயர் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியின் ரஷிட் கான் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.