அஸ்டராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி

Thursday, 23 September 2021 - 9:55

%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒக்ஸ்ஃபோர்ட் அஸ்டராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதியளித்துள்ளது. 

கொவிஷீல்ட் தடுப்பூசி இதுவரை பிரித்தானியாவின் சுற்றுலாத்துறையினருக்காக அனுமதிக்கப்பட்ட தடுப்பூசியாகப் பெயரிடப்பட்டிருக்கவில்லை. 

அஸ்ட்ராசெனெகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உள்ள சீரம் நிறுவனம் கொவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. 

இந்த தடுப்பூசிக்கு பிரித்தானியா அங்கீகாரமளிக்க மறுத்த விவகாரம், இந்தியாவில் கொந்தளிப்பை உருவாக்கியது. 

இந்தியாவில் இதுவரை 721 மில்லியன் பேர் ஒக்ஸ்ஃபோர்ட் அஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.