அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் இலங்கைக்கு பயணிக்குமாறு பிரித்தானியா அறிவுறுத்தல்

Thursday, 23 September 2021 - 14:24

%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் பிரித்தானியர்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொது நலவாயச் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

கொவிட் பரவல் நிலையைக் கருதி இலங்கையை சிவப்பு பட்டியலில் வைத்திருந்த பிரித்தானியா, நேற்று முதல் அந்தப் பட்டியலிலிருந்து இலங்கையை நீக்கியது.

எவ்வாறாயினும், குறுகிய அறிவிப்பின் பேரில் இலங்கையில் பயணத்தடைகள், ஊரடங்கு சட்டம் என்பன ஏற்படுத்தப்படும் என்பதோடு, விமானப்பயணங்களிலும் மாற்றம் ஏற்படக்கூடும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானியர்கள் இலங்கைக்கு அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.