சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகின்றன

Thursday, 23 September 2021 - 19:53

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9
2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் தொடர்ந்தமையால் பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் நிலவியது.

அதற்கமைய, இன்றிரவு குறித்த பெறுபேறுகள் உத்தியோகப்பூர்வமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.