சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Thursday, 23 September 2021 - 20:31

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9
2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்தப் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

கொவிட் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் தொடர்ந்தமையால் பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் நிலவியது.