மூன்று படிமுறைகளின் கீழ் 12 - 19 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள்

Thursday, 23 September 2021 - 22:05

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D+12+-+19+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
எதிர்வரும் நாட்களில், நாட்டின் அனைத்து மாகாண, மாவட்ட மற்றும் ஆதார வைத்தியசாலைகளிலும், சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலுக்குரிய திட்டமிடல்கள், விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் குழாம் தெரிவித்துள்ளது.

சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலானது, மூன்று படிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, நாட்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டத் தடுப்பூசி ஏற்றல் இடம்பெறும்.

15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, ஆரோக்கியமான சிறுவர்களுக்கு, அடுத்தக்கட்டமாக தடுப்பூசி ஏற்றப்படும்.

இந்த நடவடிக்கை, வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட ஏனைய சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம், மூன்றாவது படிமுறையாக, விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி ஏற்றப்படும் சிறுவர்கள் தொடர்பில், விசேட வைத்திய குழுவொன்றினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறுவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் அவதானிக்கப்படும்.

வீடுகளுக்கு சென்ற பின்னர் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமாயின், அதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படும் என்று, விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை, வைத்தியசாலைகளுக்குள் மாத்திரம் முன்னெடுக்கவும் ஃபைசர் தடுப்பூசியை மாத்திரம் சிறுவர்களுக்கு ஏற்றவும், விசேட வைத்திய நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.