இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸை சந்தித்தார்

Friday, 24 September 2021 - 8:39

+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%2C+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AA+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளி அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸை சந்தித்துள்ளார்.

வொஷிங்டனில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

கமலா ஹரிஸ், அமெரிக்காவின் முதலாவது பெண் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த முதலாவது உப ஜனாதிபதியாவார்.

கமலா ஹரிஸின் வரலாற்று பதவி நிலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், தங்களை வரவேற்க இந்திய மக்கள் காத்திருப்பதாகவும் அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸிடம், இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் விஜயமாக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இன்று அவர் சந்திக்க உள்ளார்.