சவூதி அரேபியாவின் சுற்றுலாத்துறையினருக்கான விசேட விழிப்புணர்வு செயலமர்வு

Sunday, 03 October 2021 - 10:26

%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை என்பன இணைந்து சவூதி அரேபியாவின் சுற்றுலாத்துறையினருக்கான விசேட விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றை நடத்தியுள்ளது.

தொலைக்காணொளி ஊடாக இந்தச் செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

சுமார் 90க்கும் மேற்பட்ட சுற்றுலா நிறுவனங்கள் இதில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் தற்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்கள் என்பன தொடர்பில் இதன்போது குறித்த சுற்றுலா நிறுவனங்களுக்கு விளக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் எதிர்கால சுற்றுலா மேம்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கருத்துரைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் காலங்களில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.