இலங்கையின் எரிசக்தித் துறையின் திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி

Tuesday, 05 October 2021 - 10:32

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
இலங்கையின் எரிசக்தித் துறை தேவைகளில் 70 சதவீதமான புதுப்பிக்கத்தக்கச் சக்திக்கு மாற்றும் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவ முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் இந்த இலக்கை எட்டுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பு கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான முக்கிய சந்திப்பொன்று அண்மையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியப் பிராந்திய இயக்குனர் கொனிச் யோக்கோயாமாவுடன் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் சக்தி வலுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, சூரிய மற்றும் நீர் மின் உற்பத்தித் திட்ட மேம்பாட்டு அமைச்சை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.