இராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த அரவிந்த் திரிவேதி காலமானார்

Wednesday, 06 October 2021 - 16:20

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
இராமாயண தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான, நடிகர் அரவிந்த் திரிவேதி மாரடைப்பால் காலமானார்

ராமானந்த் சாகரின் இராமாயண இதிகாச தொடர் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தத் தொடரில் ராவணனாக நடித்தவர் அரவிந்த் திரிவேதி.

நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தனது 82ஆவது வயதில் நேற்று காலமானார்.

இராமாயணத்தில் எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் தனது பண்பட்ட நடிப்பால் பெரிய ரசிகர்கள் கூட்டத்தைச் சேர்த்திருந்தார் அரவிந்த் திரிவேதி.

300க்கும் மேற்பட்ட இந்தி, குஜராத்திய படங்களில் இவர் நடித்துள்ளார்.

இதற்காகப் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் தனது பங்களிப்பைச் செலுத்தினார்.

திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

இவர் மரணமடைந்ததாகப் பலமுறை வதந்திகளும் பரவியிருக்கிறது.

இவருக்குக் கவுஸ்துப் என்ற மனைவி இருக்கிறார்.

இவரது சகோதரர் உபேந்திரா திரிவேதியும் பிரபலமான நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.