இலங்கை - ஓமான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச இருபதுக்கு 20 தொடர் இன்று!

Thursday, 07 October 2021 - 7:51

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%21
இலங்கை மற்றும் ஓமான் ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று (07) ஆரம்பமாகவுள்ளது.

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரினை எதிர்கொள்வதற்கு முன்னர் இரண்டு அணிகளுக்கும் இடையில், இந்தத் தொடரினை சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்துகின்றது.

இதற்கமைய, இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி ஓமானில் இலங்கை நேரப்படி இன்று (07) பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் வீரர்கள் அடங்கிய குழாமினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓமானுக்கு சென்று, அங்கு பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.