இலங்கையர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகளை வழங்குமாறு சவுதி அரேபியாவிடம் கோரிக்கை

Friday, 08 October 2021 - 9:07

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
சவுதி அரேபியாவில் இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புகள், இரு நாடுகளினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல் ஹர்தியுடன், வெளிவிவகார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திறமையான மற்றும் தொழில்முறைப் பிரிவுகளில் இலங்கையர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்குமாறு, இதன்போது அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம், கொவிட்-19 தொற்றுநோயின் ஆரம்பக் கட்டங்களில் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்ப உதவிய சவுதி அரேபிய அரசாங்கத்துக்கு, வெளிவிவகார அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.