அமெரிக்கா சர்வதேச பயணிகளுக்கு விதித்த பயணத்தடையை நீக்கியது

Saturday, 09 October 2021 - 6:55

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81
கொவிட் பரவல் காரணமாக அமெரிக்கா சர்வதேச பயணிகளுக்கு விதித்த பயணத்தடையை இன்று(09) முதல் நீக்கியுள்ளது.

எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதிப்பெற்ற கொவிட் தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும் பெற்றவர்களுக்கு மாத்திரமே அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனடிப்படையில் பைஸர், மொடெர்னா, அஸ்ட்ராசெனெகா, ஜோன்சன் எண்ட் ஜோன்சன், சைனோபாம் மற்றும் சினோவெக் ஆகிய தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் மாத்திரமே அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.