ரஷ்யாவிலிருந்து அதிக பயணிகளை எதிர்பார்க்கும் சுற்றுலாத்துறை அமைச்சு

Saturday, 09 October 2021 - 8:18

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
எதிர்வரும் மாதங்களில் ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் எனச் சுற்றுலாத்துறை அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டிலிருந்து மொஸ்கோவிற்கு நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த எதிர்ப்பார்ப்பை அந்த அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஆறு வருடங்களின் பின்னர், கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி இலங்கையிலிருந்து ரஷ்யாவிற்கான விமான சேவை ஆரம்பமானது.

இதற்கமைய, வாராந்தம் இலங்கையிலிருந்து ரஷ்யா - மொஸ்கோவிற்கான விமான சேவை முன்னெடுக்கப்படுகின்றது.