இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 92.5 சதவீத வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது

Saturday, 09 October 2021 - 13:31

+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+92.5+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
கடந்த செப்டெம்பர் மாதம் நாட்டுக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13,547 ஆக அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 5,040 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.

இந்நிலையில், சார்க் வலயத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை, இந்த அதிகரிப்புக்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்தியாவிலிருந்து 8,528 பேரும், பாகிஸ்தானிலிருந்து 1,225 பேரும் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

இதற்கமைய, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம்வரையில் 37,924 பேர் நாட்டுக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் 507,311 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில், சுற்றுலாப் பயணிகளின் வருகையானது 92.5 சதவீத வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.