ஓமானுக்கு எதிரான தொடரை வென்றது இலங்கை அணி

Saturday, 09 October 2021 - 23:58

%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய, ஓமானுக்கு எதிரான தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக அகிப் இல்யாஸ் 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் லஹிரு குமார 20 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 160 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய இலங்கை அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 163 ஓட்டங்களை பெற்று போட்டியை வென்றது.

அணிசார்பில் அதிகபடியாக பானுக ராஜபக்ஷ 35 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஓமான் அணியின் மொஹமட் நதீம் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.