லெபனானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் விநியோகம் முழுமையாக துண்டிப்பு

Sunday, 10 October 2021 - 8:40

+%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அங்கு முழுமையாக மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் இரண்டு மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுமுதல் இந்த மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு மின்சாரத்தை மீள வழங்குவதற்குப் பல நாட்கள் செல்லும் என அந்நாட்டு அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18 மாதங்களாக லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகின்றது.

இதன்காரணமாக லெபனானின் மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும் வலுப்பெற்றுள்ளன.

லெபனானில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாகத் தனியார் மின் பிறப்பாக்கிகளையும் செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.