அடுத்தாண்டுக்கான பாதீடு ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமைய வேண்டும்

Sunday, 10 October 2021 - 13:55

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமைய வேண்டுமென தேசிய வர்த்தக ஏற்றுமதியாளர் சம்மேளனம் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போது சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள சவால் நிலையை எதிர்கொள்ள முடியுமென சம்மேளனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சாதகமான தன்மையில் பாதீடு உருவாக்கப்படுமாயின், ஏற்றுமதியாளர்கள் புதிய ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்பினை பெற முயற்சிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் தற்போது நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும், இந்த வருடத்தில் மாதாந்தம் ஏற்றுமதியாளர்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயர் நிலையிலான கப்பல் கட்டணம், சரக்குகளின் உயர் விலை, நாணயத்தின் ஏற்றத்தாழ்வு என்பன இலங்கை ஏற்றுமதியாளர்களை அதிகம் பாதித்துள்ளதாகவும், தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் கருத்தரங்கில் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.