சீனாவில் 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற அடக்குமுறையை நினைவு கூரும் தூபியை அகற்ற கோரிக்கை

Sunday, 10 October 2021 - 14:11

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+1989+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
சீன ரினமண்ட் (Tiananmen) சதுக்கத்தில் 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற அடக்குமுறையை நினைவு கூரும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட தூபி அகற்றப்பட வேண்டும் என ஹொங்கொங் பல்கலைக்கழகம் கோரியுள்ளது.

இந்த நினைவு தூபி, கொல்லப்பட்ட ஏராளமான மனித உடல்களை அடையாளப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையானது, தொடர்ந்தும் பழைய சம்பவங்களை நினைவு கூர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் ஜனநாயகம் சீர்திருத்தப்பட வேண்டும் என 1989 ஆம் ஆண்டு சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள ரினமன் சதுக்கத்தில் ஆயிரங்கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமொன்று பல வாரங்களாக இடம்பெற்றது.

1989 ஜூன் மாதம் 3 ஆம் திகதி சீன துருப்பினர், சதுக்கத்தினுள் நுழைந்து யுத்த தாங்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இந்த பாரிய தாக்குதல் காரணமாக 3,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக நேரில் கண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் எந்தவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை.

சர்வதேச ரீதியாக இந்த சம்பவம் வெளிப்பட்டதையடுத்து 200 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களால் இந்தச் சம்பவம் வருடாந்தம் கடந்த 24 ஆண்டுகளாக ஹொங்கொங்கில் நினைவு கூறப்பட்டு வந்தநிலையில் கொவிட்-19 பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு அதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடையை மீறிய ஒன்பது பேருக்கு ஆறு மாதம் முதல் 10 மாத வரையான சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.