இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி காண் போட்டி இன்று

Sunday, 10 October 2021 - 14:37

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி காண் போட்டியில் டெல்லி கெப்பிட்டல் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று(10) மோதவுள்ளன.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தப்போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

பதினான்காவது ஐ.பி.எல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன.

அதேவேளை, நாளைய தினம் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதி காண் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது.