சீனாவின் அச்சுறுத்தலுக்கு அடிப்பணிய போவதில்லை - சாய் இங்-வென்

Sunday, 10 October 2021 - 19:26

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D
சீனாவின் அச்சுறுத்தலுக்கு அடிப்பணிய போவதில்லையெனத் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.

தாய்வானின் தேசிய தினத்தில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அதேநேரம், சீனாவினாவின் செயல்பாடுகளைத் தாம் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2 கோடியே 30 லட்சம் மக்களின் இறைமை மற்றும் சுதந்திரம் என்பனவற்றிற்கு பங்கம் ஏற்படுவதை ஏற்றுக்கொள் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், சீனாவையும் தாய்வானையும் மீள ஒன்றிணைப்பதில் சீனா முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகச் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் வலியுறுத்தியிருந்தார்.

தாம் இறைமையுள்ள நாடு எனத் தாய்வான் தெரிவித்து வருகின்ற நிலையில், சீனாவின் நிலப்பரப்பிலிருந்து பிரிந்து சென்ற மாகாணமே தாய்வானெனத் தெரிவித்து வருகின்றது.

தாய்வானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையினை சீனா மேற்கொள்ளலாம் என்பதனை வலியுறுத்தும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் யுத்த விமானங்களைத் தாய்வானின் வான்பரப்பில் பறக்கவிட்டமை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.