தலிபான்களின் சிரேஷ்ட தலைவர்களுக்கும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு

Monday, 11 October 2021 - 8:05

%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தலிபான்களின் சிரேஷ்ட  தலைவர்களுக்கும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பானது கட்டார் தலைநகர் தோஹாவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆக்ஸ்ட் மாதம் 30 ஆம் திகதி ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க துருப்பினர் வெளியேறியதையடுத்து இந்தச் சந்திப்பானது முதல் முறையாக இடம்பெற்றுள்ளது.

இதில் தலிபான்களின் அரசாங்கத்தினை அங்கிகரிப்பது தொடர்பில் தற்போது எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு சாதகமான பதில்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தலிபான்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஆப்கானிஸ்தான் மக்களின் மனித உரிமைகள் சார் விடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியமும் அவதானம் செலுத்தியுள்ளது.