ஆடவர் இருபதுக்கு20 உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக ' நடுவர் முடிவு மறு ஆய்வு முறைமை' அறிமுகம்

Monday, 11 October 2021 - 11:01

%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8120+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%27+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%27+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஐசிசி ஆடவர் இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் முறையாக, 'நடுவர் முடிவு மறு ஆய்வு முறைமை' (decision review system - DRS) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ள இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்த முடிவு மறு ஆய்வு முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறும் இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான விளையாட்டு விதிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. 
 
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அனுபவமிக்க நடுவர்கள் களத்தில் பணியாற்றுவது குறைவடையக்கூடும். இதனால் அனுபவம் குறைந்த நடுவர்களை போட்டிகளில் ஈடுபடுத்தும்போது சில தவறுகள் ஏற்படக்கூடும்.
 
இதன்காரணமாக இன்னிங்ஸ் ஒன்றுக்கு இரண்டு டி.ஆர்.எஸ் முறைகளை அணிகள் கோர முடியும் என சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது. 
 
அதேநேரம், மழைக்காரணமாகப் பாதிக்கப்படும் போட்டிகளில் டக்வர்த் லூயிஸ் முறையினை பயன்படுத்துவதற்காக இரண்டாவதாகத் துடுப்பாடும் அணி குறைந்தபட்சம் 5 ஓவர்கள்வரை விளையாடியிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வெளியேற்றும் மற்றும் இறுதி போட்டிகளில் 10 ஓவர்கள் விளையாடியிருந்தால் மாத்திரமே டக்வர்த் லூயிஸ் முறை பின்பற்றப்படும் எனவும் சர்வதேச கிரிக்கட் பேரவை குறிப்பிட்டுள்ளது.