2021 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Monday, 11 October 2021 - 17:10

2021+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
2021 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று (11) அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 3 பொருளியல் நிபுணர்களுக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டேவிட் கார்ட் (David Card), ஜோஸ்வா டி.அங்ரிஸ்ட் (Joshua D. Angrist) மற்றும் கொய்டோ டபிள்யூ. இம்பென்ஸ் (Guido W. Imbens) ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த இவ்வருடத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு இன்றுடன் நிறைவுக்கு வந்தது.

மேற்படி பரிசுகளில் அமைதிக்கான நோபல் பரிசு மாத்திரம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அறிவிக்கப்படுகிறது.

ஏனைய நோபல் பரிசுகள் சுவீடனின் ஸ்டொக்ஹோமிலிருந்து அறிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.