ஹாரிஸ் ஜெயராஜை சந்தித்தார் யொஹானி

Monday, 11 October 2021 - 17:19

%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜை, இலங்கையின் பிரபலமான பாடகி யொஹானி டி சில்வா சந்தித்துள்ளார். 
 
இந்தியா சென்றுள்ள யொஹானி டி சில்வா அங்குள்ள பிரபலங்கள் பலரையும் சந்தித்திருந்ததுடன், இந்திய ஊடகங்களுக்கு செவ்விகளையும் வழங்கியிருந்தார். 
 
ஒரே பாடலில் உலகளாவிய இசை ரசிகர்களைத் தன்பக்கம் திருப்பியிருந்த யொஹானி டி சில்வா, அண்மையில் ஹிந்தி பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொலிவூட் நடிகர் சல்மான் கானை சந்தித்திருந்தார்.
 
அதன்போது, தான் பாடிய 'மெனிக்கே மகே ஹித்தே' பாடலை சல்மான் கானுக்கு சொல்லிக்கொடுத்து, அவரைப் பாடச் செய்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகிப் பிரபலமாகியிருந்தது. 
 
இந்நிலையில், யொஹானி டி சில்வா தன்னை சந்திக்கவந்தபோது எடுத்துகொண்ட புகைப்படத்தை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 
 
இந்தச் சந்திப்பின்போது, பாடலாசிரியர் மதன் கார்க்கியும் கலந்துகொண்டிருப்பதை புகைப்படத்தின் மூலம் காணலாம்.