வெளியேறியது RCB: முன்னேறியது KKR

Monday, 11 October 2021 - 23:34

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+RCB%3A+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+KKR
ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய வெளியேறல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

2021 ஐபிஎல் தொடரின் வெளியேறல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் 3, 4 ஆம் இடங்களைப் பெற்ற ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதின.

ஷார்ஜாவில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில், 139 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அதற்கமைய, எதிர்வரும் 2 ஆவது தகுதிகாண் போட்டியில் டெல்லி கெப்பிட்டெல்ஸ் அணியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சந்திக்கவுள்ள அதேவேளை, தோல்வியை தழுவிய ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடரிலிருந்து வெளியேறியது.

முதலாவது தகுதிகாண் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸை தோற்கடித்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

இந்நிலையில், இரண்டாவது தகுதிசுற்றில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்தாடும்.

இன்றைய எண்ணிக்கை சுருக்கம்

துடுப்பாட்ட சுருக்கம்

ரோயல் செலலெஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலி 39 ஓட்டங்கள்

தேவ்தத் படிக்கல் 21 ஓட்டங்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுப்மன் கில் 29 ஓட்டங்கள்

வெங்கடேஸ் ஐயர் 26 ஓட்டங்கள்

சுனில் நரைன் 26 ஓட்டங்கள்



பந்து வீச்சு சுருக்கம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுனில் நரைன் 21 – 4

லோகி பெர்கியூஸன் 30 -2

ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர்

மொஹமட் சிராஜ் 19 -2

ஹர்ஷல் பட்டேல் 19 -2

யுஷ்வேந்தர் சஹல் 16 -2