ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு 11 கோடி அமெரிக்க டொலர் கடன் உதவி

Tuesday, 12 October 2021 - 10:10

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+11+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
ஆசிய அபிவிருத்தி வங்கி 11 கோடி அமெரிக்க டொலர் நிதியினை இலங்கைக்கு கடனாக வழங்க முன்வந்துள்ளது.

தற்போது முன்னெடுக்கப்படும் சுகாதார துறை மேம்பாட்டுத் திட்டத்திற்கு மேலதிகமாக இந்த நிதி வழங்கப்படுகிறது.

இந்த நிதியானது நாட்டின் ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு முறைமையை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான கடன் ஒப்பந்தம் ஒன்று ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே கைச்சாத்தாகியுள்ளது.

இலங்கையின் சார்பாக திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல கைச்சாத்திட்ட அதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பாக, அதன் வதிவிட பணிப்பாளர் சென் சென்  இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.