விமானங்களில் 100 சதவீத பயணிகளை அனுமதிக்க இந்தியா தீர்மானம்

Tuesday, 12 October 2021 - 22:45

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+100+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
எதிர்வரும் 18ம் திகதி முதல் உள்நாட்டு விமானங்களில் 100 சதவீத பயணிகளை அனுமதிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் போது, 54 சதவீத இருக்கை வசதியை மாத்திரமே பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ளதை அடுத்து உள்நாட்டு விமான சேவைகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சு நீக்கியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 18ம் திகதி முதல் உள்நாட்டு விமான சேவை எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி 100 சதவீத இருக்கை வசதியுடன் பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.