கட்டணமின்றி இந்திய அணியின் ஆலோசகராக பணியாற்றவுள்ள தோனி!

Wednesday, 13 October 2021 - 13:05

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%21
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்திய அணியின் ஆலோசகராக செயற்படுவதற்கு கட்டணம் எதுவும் அவசியமில்லை என அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவுரவ் கங்குலி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.