கொழும்புக்கு பிரவேசிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

Wednesday, 13 October 2021 - 14:21

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
புதிய களனி பாலத்தின் இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகள் காரணமாக, பேஸ்லைன் மற்றும் துறைமுக நுழைவு வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகக் காவல்துறையினர் மாற்று வீதிகளை அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, பின்வரும் வீதிகளைப் பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசலை குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டி வீதியினூடாகக் கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகனங்கள் பேஸ்லைன் வீதியில் பயணிக்காமல், நவலோக்க சுற்றிவட்டத்தினூடாக தொட்டலங்க சந்தி, ப்ரின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி அல்லது ப்ளூமெண்டல் வீதியினூடாகக் கொழும்புக்கு பிரவேசிக்க முடியும்.

நீர்கொழும்பு வீதியினூடாக வருகைதரும் வாகனங்கள் கதிரான பாலம், அளுத்மாவத்தை வழியாகக் கொழும்புக்கு பிரவேசிக்க முடியும்.

பழைய அவிசாவளை வீதியினூடாக வருகைதரும் வாகனங்கள் ஸ்டேஸ் வீதி, பலாமர சந்தி, லேயார்ட்ஸ் ப்ரோட்வே, ப்ரின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி ஊடாகக் கொழும்புக்கு பிரவேசிக்க முடியும்.

மேற்படி வீதிகளைப் பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவகையில் செயற்படுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.