உணவு நெருக்கடியை நோக்கி நகரும் வட கொரியா

Wednesday, 13 October 2021 - 20:53

%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
வட கொரியா விரைவில் பாரிய உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
 
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடந்த வருடத்தின் முற்பகுதியிலிருந்து விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமை அதற்குப் பிரதான காரணம் என ஐ.நா மனித உரிமைகள் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக வட கொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறித்த நிபுணர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதற்கமைய, வட கொரியா விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என ஐ.நா தெரிவித்துள்ளது.