நோர்வேயில் வில், அம்புகளால் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல்: ஐவர் பலி!

Thursday, 14 October 2021 - 6:36

%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
நோர்வேயில்  காங்ஸ்பெர்க் நகரில் இன்று  மர்ம நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலினால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்திற்கு வந்த குறித்த சந்தேக நபர், வில், அம்பு மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை பயன்படுத்தி மக்களைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தாக்குதலால் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் குறித்த தாக்குதலை நடத்திய சந்தேக நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர் இந்தத் தாக்குதலை நடத்தியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அத்துடன், தனிநபர் ஒருவரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.