கைப்பேசி கைப்பற்றப்பட்ட சம்பவம்: ரிஷாட் மீண்டும் சிறைச்சாலை நீதிமன்றம் முன்னிலையில்

Thursday, 14 October 2021 - 8:02

%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கைப்பேசி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் மீண்டும் சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர், தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று (13) சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 24 ஆம் திகதி சிறைச்சாலை நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதீயுதினின், சிறை அறையிலிருந்து கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி கைப்பேசி ஒன்று கைப்பற்றப்பட்டிருந்தது.

அதனை நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கியதாகக் கூறப்படும் சிறை அதிகாரி மெகசின் சிறைச்சாலையிலிருந்து வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதேநேரம், சிறைச்சாலை வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஏலவே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.