கென்யாவின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை எக்னஸ் கொலை!

Thursday, 14 October 2021 - 8:46

%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%21
கென்யாவின் மெய்வல்லுநர் வீராங்கனை எக்னஸ் டிரோப் (Agnes Tirop) அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கென்ய வீராங்கனையான எக்னஸ் (25) அவரது கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமென காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், தலைமறைவாகியுள்ளதாகக் கருதப்படும் குறித்த சந்தேகநபரை தேடி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவர் இரண்டு முறை உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதுடன் அண்மையில் இடம்பெற்ற ஒலிம்பிக் 5,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

கடந்த மாதம், ஜேர்மனியில் மகளிருக்கான 10 கிலோமீற்றர் வீீதியோட்டப் போட்டியில் டிரோப் உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.