இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 23 இந்திய மீனவர்கள் கைது! (படங்கள்)

Thursday, 14 October 2021 - 8:59

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+23+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கிழக்கு கடற்பரப்பின் வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து அவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். 
 
இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
கைதானவர்கள், காங்கேசன்துறை - மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 
கடற்படையினால் இறுதியாக கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி நாட்டின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 5 படகுகளுடன் 54 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் வெளிநாட்வர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
 
அவ்வாறு கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை நாட்டின் கடற்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைளையே கடந்த ஆறுமாத காலமாக கடற்படையினர் முன்னெடுத்திருந்தனர்.