சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் சிக்கினர் (படங்கள்)

Thursday, 14 October 2021 - 10:25

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
மினுவாங்கொடை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 333 சட்டவிரோத மதுபான போத்தல்களும், 2 செப்பு கம்பிகளும், ஒரு எரிவாயு கொள்கலனும், 4 பீப்பாய்களும் மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 27 மற்றும் 38 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.