பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை வழங்குமாறு கோரி விவசாயிகள் இன்றும் ஆர்ப்பாட்டம்

Thursday, 14 October 2021 - 13:05

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை வழங்குமாறு கோரி நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

உரிய பசளையின்றி பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், அரசாங்க நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பொட்டாசியம் க்ளோரைட்டு சேதன பசளை தொகை பல மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம், குருநாகல், புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் விவசாய சேவை மையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.