மீனவர் பிரச்சினை குறித்து அரசாங்கத்துக்கு தமிழ் தரப்புக்கள் அழுத்தம் பிரயோகிப்பதே அவசர தேவையாகவுள்ளது

Thursday, 14 October 2021 - 18:51

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81+
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில், இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி உரிய வழியில் செயற்பட வைக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே அவசியமாகின்றதெனத் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரான சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வட பிரதேசத்தை அண்டிய இலங்கைக் கடற்பரப்பிற்குள் தொடர்ந்து ஊடுருவும் தமிழ்நாட்டு ஆழ்கடல் இழுவிசைப் படகுகளால் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இதன் விளைவாக இருதரப்பு மீனவர்களையும் மோதவைக்கும் நோக்கத்துடன் சில தமிழ் அரசியற் சக்திகள் செயலில் இறங்கியுள்ளன என்பதை குறிப்பிட வேண்டும் என சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறல்களால் வடக்கு மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய இலங்கை அரசாங்கம், கடற்படை ஊடாகத் தேவையான நடவடிக்கைகளைப் போதுமான அளவில் எடுக்கத் தவறியிருக்கின்றது. இந்த நிலையில் மீனவர்களின் உணர்வுபூர்வமான பிரச்சினை, பொறுப்போடும் நிதானத்தோடும் கையாளப்பட வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்களையும், வடக்கு மீனவர்களையும் மோதவைக்க விரிக்கப்பட்டிருக்கும் சதிவலைக்குள் தங்கள் தரப்பினர் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றும் ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்தியப் படகுகளைக் கைப்பற்றி, அவற்றில் இருப்பவர்களைக் கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதை கடற்படை ஊடாக செய்ய வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்தி, தமிழ்த் தேசிய அரசியல் தரப்பிலிருந்து சாத்தியமான சகல வழிகளிலும் அழுத்தம் கொடுக்கப்படுவதே இன்றைய அவசரத் தேவையாகும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.