இலங்கை - அல்ஜீரியா பொருளாதார மேம்பாடு தொடர்பில் கலந்துரையாடல்

Friday, 15 October 2021 - 9:10

+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
இலங்கையும் அல்ஜீரியாவும் பொருளாதார மேம்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அல்ஜீரிய மக்கள் ஜனநாயக குடியரசுடனான இருதரப்பு மெய்நிகர் ஆலோசனைகளை முதன்முதலாக இலங்கை அண்மையில் நடத்தியது.

அல்ஜீரியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் 0.63 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமேயானாலும், அல்ஜீரியாவிலிருந்து இலங்கைக்கான இறக்குமதிகள் 4.76 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவிருந்தது.

பெற்றோலியம் மற்றும் எரிவாயுவின் பிரதான ஏற்றுமதியாளர் என்ற வகையில், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகள் பெரும்பாலும் எரிசக்தி துறையுடனேயே இருந்துள்ளது.

இந்நிலையில் தேயிலை, வாசனைப்பொருட்கள், தெங்கு உற்பத்திகள் மற்றும் ஆடைகள் போன்ற ஏற்றுமதிகளை மேலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறு தொடர்பில் ஆராயப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.