ஹெய்ட்டியில் 17 கத்தோலிக்க மத செயற்பாட்டாளர்கள் கடத்தல்

Sunday, 17 October 2021 - 15:04

%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+17+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
ஹெய்ட்டியின் தலைநகரில் நிலைக்கொண்டிருந்த கத்தோலிக்க மத செயற்பாட்டாளர்களான 17 அமெரிக்கர்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் செய்தியினை 'நியூயோர்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ளது.

அவர்களின் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்களும், கடத்தி செல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஹெய்ட்டியில் உள்ள அமெரிக்க தூதுவராலயம் இதுவரை எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை.

அதேநேரம், இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக ஹெய்ட்டி காவல்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹெய்ட்டியின் ஜனாதிபதி ஜோவினல் மொய்ஸ் கொலை செய்யப்பட்டமை மற்றும் 2,000க்கும் மேற்பட்ட உயிர்களை காவுக்கொண்ட ஓகஸ்ட் மாத நில அதிர்விற்கு பின்னர் அங்கு வன்முறைச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.