கொவிட் தொற்றால் மேலும் 12 பேர் மரணம்!

Sunday, 17 October 2021 - 17:44

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+12+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21
நாட்டில் மேலும் 12 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

8 ஆண்களினதும், 4 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகின.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (16) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (17) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,484ஆக உயர்வடைந்துள்ளது.

30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 2 ஆண்களும், ஒரு பெண்ணும் மரணித்துள்ளனர்.

60 வயதிற்கு மேற்பட்ட 9 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அவர்களில், 6 ஆண்களும், 3 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.