பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 60,000 பட்டதாரி ஆசிரியர்கள் சேவைக்கு

Sunday, 17 October 2021 - 19:37

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+60%2C000+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட 60,000 பட்டதாரிகள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டவாறு பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகள், ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டு கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும்.

அதேநேரம், ஒரு சிலர் குறுகிய அரசியல் நோக்கத்திற்காகவே, தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் தமது பணிகளுக்கு சமூகமளிப்பது தொடர்பான இறுதி தீர்மானத்தினை நாளைய தினம் அறிவிக்கவுள்ளதாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது சங்கத்தினருடன் கலந்துரையாடி குறித்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.