இளம் காதலர்களின் உயிரை பறித்த சட்டவிரோத மின் கம்பி

Monday, 18 October 2021 - 10:02

%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF

எம்பிலிப்பிட்டிய, கொலொன்ன, பிடவெலகம பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் இன்று (18) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி இரவு குறித்த பகுதியில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.

மாத்தறை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரும், கொலொன்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதான யுவதியொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பேஸ்புக் மூலம் அறிமுகமான இவ்விருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று குறித்த இளைஞர் கொலொன்ன பகுதியில் உள்ள யுவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அதன்போது இருவரும் சந்தித்து பேசியுள்ள நிலையில் அதனை அங்கிருந்த சிலர் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, இருவரும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது, காணியொன்றுக்கு வேலியாக இடப்பட்டிருந்த சட்டவிரோத மின் கம்பியில் சிக்கி பலியாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவாின் சடலங்கள் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், எம்பிலிப்பிட்டிய நீதிவானின் நீதிவான் விசாரணைகளையடுத்து எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பில் சட்டவிரோத மின் இணைப்பைப் பொருத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரே  இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.