மாணவியொருவாின் நிர்வாணப் படங்களை பயன்படுத்தி பணம் பறிக்க முயன்றவர் கைது!

Monday, 18 October 2021 - 10:15

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21

பாடசாலை மாணவியொருவரின்  நிர்வாண புகைப்படங்களை, இணையத்தில் பதிவேற்றுவதாக அச்சுறுத்தி பணம் பறிக்க முயன்ற இளைஞர் ஒருவரை தம்புள்ளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தசம்பவம் தொடர்பில் மாணவியின் தாய் காவல்துறையில் அளித்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த மாணவியை ஏமாற்றி அவரின் அரை நிர்வாண படங்களைப் பெற்று, பின்னர் அவற்றை இணையத்தில் பதிவேற்றவுள்ளதாக அச்சுறுத்தி 45,000 ரூபா பணம் கோாி மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், மேற்படி மாணவியின் ஊடாக சந்தேகநபரை தம்புள்ளை நகருக்கு வரவழைத்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபரின் கைபேசியில் பல பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.